நொய்டா பகுதியில் விஜய் சௌத்ரி, அனாஸ் என இரண்டு நண்பர்கள் பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது நண்பர்கள் இருவரும் காரின் உள்ளேயே மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தீயில் கருகி உயிர் இழந்தனர். கார் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்த ஒரு நபர் எரிந்து கொண்டிருக்கும் காரை பார்த்துவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடு்த்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துவிட்டு சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதனால் தானாகவே காரின் கதவு லாக் செய்யப்பட்டு இருவரும் உள்ளேயே கருகி இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.