தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னனுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், வடபழனி, தி நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பெரும்பாக்கம் மற்றும் சோலையூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

அதோடு கோடம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், கொரட்டூர், சைதாப்பேட்டை, கிண்டி, மேற்கு மாம்பழம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முழுவதும் மழை பெய்யாத நிலையில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வருகிற 20-ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.