
பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான நிதின் கட்காரி தனக்கு பலமுறை பிரதமராகும் ஆஃபர் வந்தது என்றும் ஆனால் தனக்கு அந்த எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். அதாவது எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் நிதின் கட்காரியிடம் நீங்கள் பிரதமராக மாறினால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் நிதின் கட்காரி எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை எனவும் நான் பிரதமர் ஆனால் நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளார்.
அதோடு தனக்கு பலமுறை பிரதமராகும் ஆஃபர் வந்தது என்றும் ஆனால் அந்த பதவியை தான் நிராகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதோடு தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை எனவும் என்னுடைய நோக்கம் அது கிடையாது என்றும் கூறியுள்ளார். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வீர்களா இல்லையா என்ற கேள்வியே என்னிடம் கிடையாது. என்னுடைய நம்பிக்கையுடனும் சித்தாந்தத்துடனும் நான் வாழ்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நிதின் கட்காரி பிரதமராகும் வாய்ப்பு தனக்கு பலமுறை வந்தது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.