ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார் இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது வடிவுக்கரசி பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது படத்தில் நடிக்க பலமுறை அவரிடம் வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் தரவில்லை என்று மூத்த நடிகை வடிவுக்கரசி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது பேசிய வடிவுக்கரசி, சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார். இதைக்கேட்டு ஓடிவந்து அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறிச் சென்றார்.