சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஷா பாஷா (47)-சாஜிதா பானு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருந்தது. இதனால் உடல் நலக் குறைவினால் கடந்த பிப்ரவரி மாதம் அவர் இறந்துவிட்டார். இருப்பினும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் கவுஷா பாஷா உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் கழுத்தை நெறித்து கவுஷா பாஷா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சாஜிதா பானுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது சாஜிதா பானு பாலியல் வழக்கில் கைதாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அவருடைய கணவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவ நாளில் தகராறு முற்றியது. அப்போது கோபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு உடல் நலம்  பாதித்ததால் தன் கணவர் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சாஜிதா பானுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.