ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தின் நிறுவாக் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்தது. கோட்டாவைச் சேர்ந்த வசுதேவ் காத்த்ரி என்ற நபர், ஹாட் ஏர் பலூன் (வெப்பக் காற்றுப் பலூன்) பரிசோதனை குழுவில் இருந்தவர்.

அவர்பலூனின் கயிறில் தவறுதலாக சிக்கிக்கொண்டு சுமார் 100 அடி உயரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, கயிறு திடீரென அறுந்து விழுந்தது. இதனால் வசுதேவ் காத்த்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by The Instant News (@the.instant.news)

இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்த போது பலர் அதனை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக வசுதேவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர்.

இந்த ஹாட் ஏர் பலூன், பாரன் மாவட்ட நிர்வாகத்துடன் முன்பும் பணியாற்றிய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், மாவட்ட ஆட்சியர் ரோஹிதாஷ் சிங் தோமர் அறிவிப்பின் படி, மூன்று நாள் கொண்டாடப்பட இருந்த விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.