நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவகாமி போன்றோர்  தலைமை தாங்கியுள்ளனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது தொடர் கனமழையின் காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மலையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் மின்சாரம், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.