பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றவுடன் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ரஷ்ய துணை அதிபர் வரவேற்றார். இதைத்தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் புதின் வீட்டில் மோடியும் புதினும் சந்தித்துக் கொண்டனர். அப்போது புதின் பிரதமராக மீண்டும் மோடி தேர்வானது ஒரு விபத்தல்ல என்று கூறினார்.

அதோடு மோடியின் பல வருட உழைப்பின் பலன் காரணமாக மட்டும்தான் அவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார். அதோடு இந்திய மக்களுக்கான பலன்களை அடையக்கூடியவராகவும் மிகவும் சுறுசுறுப்பாக தன்னுடைய பணிகளை செய்பவராகவும் மோடி இருக்கிறார் என வெளிப்படையாக புகழாரம் சூட்டினார். மேலும் இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருப்பதாக புதின் கூறியதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறியுள்ளது.