இந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பொதுவாக படங்களில் ஹீரோக்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நிலையில் ஹீரோயின்களுக்கு குறைந்த அளவில்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு நடிகைகள் கூட கூறியுள்ளனர். அதன்பிறகு தங்களுடைய சொத்து மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்காக நடிப்பது மட்டுமின்றி விளம்பர படங்கள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மற்றும் வேறு தொழில்களும் நடிகைகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பணக்கார நடிகைகள் யார் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி முதலில் இந்த பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இவருக்கு தற்போது 50 வயது ஆகும் நிலையில் இன்றளவும் படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு 862 கோடி என்று கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா இருக்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 650 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு 3-வது இடத்தில் பிரபல நடிகை ஆலியா பட் இருக்கிறார். மேலும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி  வரும் நடிகை நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி என்று கூறப்படுகிறது.