உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே இன்று அதிபயங்கரமான விபத்து ஒன்று நடந்துள்ளது. 23 பயணிகளுடன் சென்ற டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  சிலரின் உடல்நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.