
திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதன் பிறகு ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெருந்துறையைச் சேர்ந்த மூன்று பேர் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்று விட்டு திரும்ப வரும் வழியில் விபத்து நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.