இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டு இருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளின் வீடியோக்கள் பஞ்சமே இருக்காது. அவ்வகையில் யானை என்றால் முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது கம்பீரம் தான். அவை என்ன தான் கம்பீரமாக இருந்தாலும் குழந்தைகள் போல சில சேட்டைகளையும் செய்யக்கூடியவை. யானைகள் செய்யும் சேட்டைகள் இணையத்தில் வெளியாகி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து விடுகின்றன. அதிலும் குறிப்பாக குட்டி யானைகளின் சில சேட்டைகள் காண்போரை வியக்க வைக்கும்.

அவ்வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு காட்டு யானை மிகப் பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. அதனால் எழுந்து வர இயலாமல் பள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் புல்டோசர் மூலம் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த யானையை ட்ரைவர் புல்டோசர் உதவியுடன் வெளியே கொண்டு வந்தார். அப்போது பள்ளத்திலிருந்து வெளியே வந்த அந்த யானை சற்று தூரம் சென்று திரும்பி வந்து நன்றி சொல்லும் விதமாக அந்த புல்டோசரின் விளையாடியது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.