ஜார்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா மாவட்டம் லால்காபானி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் கட்டடத்தின் மீது இன்று மதியம் மின்னல் தாக்கியதில், வகுப்பறையில் இருந்த 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர். சம்பவ நேரத்தில் மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது, மின்னல் நேராக பள்ளி கட்டடத்தின் மீது தாக்கியது.

பள்ளி வளாகத்தில் இருந்த பெற்றோர் சிலர் கூறியதாவது, அந்தக் கட்டடம் ஆஸ்பெடாஸ் தகரக் கூரையால் கட்டப்பட்டதுடன், வகுப்பறைகளில் மாணவர்கள் பயன்படுத்தும் மேஜைகள் இரும்பால் செய்யப்பட்டிருந்ததால், மின்னல் நேராக மாணவர்களை தாக்கியதாக தெரிவித்தனர்.

படுகாயமடைந்த அனைத்து மாணவர்களுக்கு அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தெரிவித்ததாவது, மாணவர்களின் உடல்நிலை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும், பெரிய ஆபத்துகள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

அந்த பள்ளியின் கட்டுமான பாதுகாப்பு, மின்னல் தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.