செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் பள்ளிகூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமி மற்றும் சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த அந்த சிறுவர்களின் தாயிடம் நடத்திய விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தை பிரிந்து வாழும் சூழலில் தன்னுடைய குழந்தைகளை, நண்பர்கள் மூலம் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. நேற்று மாலை சிறுவர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியானது அப்பகுதி பெற்றோர்களிடையே பெரும் பீதியை  கிளப்பியது.