
நைஜீரியாவில் உள்ள ஓயோ மாகாணத்தில் பசொரன் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிக்கூட ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதாவது இந்த நிகழ்ச்சிகளை கண்டு களிக்க மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் வந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பரிசு பொருட்கள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏராளமான கூட்டம் பள்ளியில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மாணவ மாணவிகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.