
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தாகரி பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள அலுவலகத்தில் சம்பவ நாளில் ஆசிரியர்கள் இருவர் ரொமான்ஸ் செய்துள்ளனர். அதாவது பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் பணி நேரத்தில் லிப் டு லிப் கிஸ் கொடுத்து கட்டிப்பிடித்து அலுவலகத்தில் வைத்து ரொமான்ஸ் செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியவர்களில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.