
நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருக்கிறார். 1996 ஆம் வருடம் வெளியான Akkada Ammayi Ikkada Abbayi என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அடுத்தடுத்து பவன் கல்யாண் நடிப்பில் நான்கு படங்கள் உள்ளது. ஆனால் சினிமாவை தாண்டி தற்போது அரசியலில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Anna Lezhneva என்பவரை என்பவரை 2013 ஆம் வருடம் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அதில் மார்க் சங்கரின் கைகால்களின் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாராம்.