
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். அதில் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக, இந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தை காட்டி ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரும் கொள்கைகள் அனைத்தும் மாநில அரசுகளுக்கும் பொருந்தும். திட்டத்தை ஏற்க மறுப்பதினால் மாநில அரசு சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் என மனுவில் கூறப்பட்டுள்ளது.