சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு கருணாநிதி பிறந்தநாளில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர், கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய, CMன் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.

குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ₹14.85 கோடி மதிப்பில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று கூறியதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கூடுதலாக 37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.