கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடகம் பள்ளி பகுதியில் சுதீர் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சீருடை தைத்து கொடுக்கிறார். இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 6-ம் படிக்கும் ஒரு 11 வயது சிறுமி சீருடை தைப்பதற்காக சுதீர் கடைக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது மாணவிக்கு அளவு எடுப்பதாக கூறி சுதீர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

அதாவது அளவு எடுப்பதாக கூறி ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மாணவி அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தார். பின்னர் வீட்டுக்கு வந்ததும் தன் பெற்றோரிடம் நடந்த விபரத்தை மாணவி கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சுதீரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.