தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் தமன்னா பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பற்றிய பாடம் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது பெங்களூரில் உள்ள ஹெப்பால் பள்ளியில் சிந்தி என்ற தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சிந்த் பிரிவினைக்குப் பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாடத்தில் நடிகை தமன்னா பற்றி இருக்கிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவர்களின் பெற்றோர் தமன்னாவை பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.