தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய இடைநிற்றலை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் 9 -12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்வதற்கு  ரூ.50 லட்சம் மதிப்பில் “அகல் விளக்கு திட்டம்”செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.