கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும், என்எஸ்எஸ் முகாம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும் பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி வாங்கினார். அப்போது அவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் சிவராமன் மீது காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நள்ளிரவில்  அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார்.