
பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள குர்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது. உணவை சாப்பிட்டு சுமார் 50 குழந்தைகள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்லி விழுந்த சாப்பாடு தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை பள்ளி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்காத நிலையில் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி மீதான அதிருப்தியில் உள்ளனர்.