திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு வார்டனாக பாதிரியார் குழந்தைநாதன் (48) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் சுந்தரராஜன் (40). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் பாதிரியார் படிப்பை படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் அந்த பள்ளியின் விடுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது. அப்படி செல்லும்போது சுந்தரராஜன் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழந்தை நாதனிடம் புகார் கொடுத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரராஜன் மற்றும் குழந்தைநாதன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.