சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.