கேரள மாநிலம் கண்ணூர் அருகே வளகை என்ற இடம் உள்ளது. இந்தப் பகுதியில் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை இறக்கி விடுவதற்காக வந்தது. அப்போது திடீரென அந்த வேன்  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் 15 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.