சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகானை சேர்ந்தவர் Firoz. இவர் 2023 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக வந்த 22 வயது பழங்குடியின பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதோடு அந்தப் பெண்ணின் தொலைபேசியில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தான் ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்யும் நோக்கத்துடன் வெளியேறி இருப்பதாக குறிப்பிட்டு தன்னை யாரும் தேட வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை தாராவிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சுமார் ஒன்றரை வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொழிற்சாலை ஒன்றின் வேலை செய்து வந்த Firoz பணிக்கு செல்லும் போதெல்லாம் அந்த பெண்ணின் கை கால்களை கட்டி போட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஒருநாள் Firoz தனது தொலைபேசியை மறந்து வீட்டில் வைத்து சென்றுள்ளார்.

அந்த தொலைபேசியை பயன்படுத்தி Firoz பணிபுரியும் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து தாராவியை விட்டு தப்பியுள்ளார். சொந்த ஊருக்கு வந்த அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்துவற்றை கூற காவல்துறையினர் வழக்கு பதிந்து Firoz-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.