திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில், படிப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் பொது மற்றும் கட்டண தரிசன வலிகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்து சென்றனர். நேற்று நாகை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் ரத காவடி எடுத்து ஆடியபடி பழனி மலையை சுற்றி வந்தனர். ரத காவடியை ஏராளமான செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.