திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடைபெறுகின்றது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும் பெற்று கொண்டு  அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகிறீர்கள், அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழகத்தின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? இந்தியை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் சரி. பழமொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்.

தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காதது வரவேற்கத்தக்கது. நிதி ஒதுக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து வரி வருவாய் தரக்கூடாது. உடனே அமைச்சரவையும் சட்டசபையும் கூட்டி இந்த முடிவை எடுப்பது நல்லது. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற தீர்மானங்களை போடாமல் தமிழகத்தில் புலம்பி கொண்டிருக்கின்றன. இது போன்ற தீர்மானங்களை போட்டால் அவர்களின் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைக்காக நிற்கும் என்பதால் தயங்குகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.