
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியமான பவதாரணி கடந்த வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி புற்றுநோயால் மரணம் அடைந்தார். இன்று பவதாரணியின் நினைவு தினத்தன்று இளையராஜா அவர்கள் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“என் அருமை மகள் என்னை விட்டு பிரிந்த நாள் இன்று. அன்பின் உருவமான என் மகள் பிரிந்த பிறகு தான் அவர் எவ்வளவு அன்புமயமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது. குழந்தைகளை சரியாக கவனிக்காமல் முழு கவனத்தையும் இசையிலேயே செலுத்தி விட்டேன் என்று இப்போது வேதனையாக இருக்கிறது. ஆனால் அந்த வேதனை மக்களை ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பது எனது மனதுக்கும் ஆறுதலாக உள்ளது.
பவதாரணியின் திதி அவரது பிறந்த நாளான பிப்ரவரி 12ஆம் தேதி தான் வருகிறது. இவை இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்க முடிவெடுத்துள்ளோம். இதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டும். மேலும் என் மகள் பவதாரணி ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.