
சேலத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் மஞ்சை பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம், நகை, ரசீதுகள், மருந்து சீட்டுகளை திருடன் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கந்தமம் பட்டியை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தி மருத்துவமனை சென்று விட்டு வேலைக்கு போக அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த மூதாட்டி அங்கே பதத்தற்றுடன் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது. இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் போலீசார் விரைந்து செயல்பட்டு திருடனை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.