அமெரிக்காவின் மெக்சிகோவில் இருந்து டிஜுவானா நகருக்கு பேருந்து ஒன்று 42 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பர்ரான்கா பிளாங்கா பகுதியை நெருங்கிய போது சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்த நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்தவர்களில் இந்திய வம்சாவளியினரும் அடங்குவர் என்பதால் உயிரிழந்தவர்களில்  எத்தனை பேர் இந்தியர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.