ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் அறிக்கை வெளியிட்டனர்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசும் பல அதிரடி முடிவுகளை எடுத்தது. இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Antony (@vijayantony)

அதில் காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்கள் என் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியும் மகிழ்ச்சியும் மட்டுமே விரும்புகிறார்கள்.

வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம் என பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய் ஆண்டனியின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு… காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம் என கூறியுள்ளார்.