இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறுவது போன்று பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெறும். அந்த வகையில் நேற்று பாகிஸ்தானில் தொடர் தொடங்கிய நிலையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் இஸ்லாமத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் அங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.