
பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிப் வெளியிட்ட தீவிரமான, பதற்றத்தை உருவாக்கும் பேச்சு இந்திய அரசை கடும் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது. அதன்படி, அவரது X கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அஸிப், சமீபத்திய பேட்டியில், “இந்திய ராணுவத்தினரின் தாக்குதல் விரைவில் நிகழக்கூடும்” என கூறி, இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளார். இதை தொடர்ந்து, இந்திய அரசு, தூண்டுதலான கருத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
In intv on Sky News Pakistan Defence Minister Asif says Pakistan did the “dirty work” of funding terrorist groups (Kashmir/Afghanistan) for 3 decades, on behalf of US and the West pic.twitter.com/mM2epmzyzx
— Suhasini Haidar (@suhasinih) April 25, 2025
“>
இந்திய பாதுகாப்பு துறையை குறிவைத்து வெளியிடப்படும் எதுவிதமான தவறான தகவல்களுக்கும், தவிர்க்க முடியாத விளைவுகளுக்கும் இடமளிக்கமாட்டோம் எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.