
தெலுங்கு நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அவர் ஒரு வழியாக நமக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒரு நடிகர், நம் வாழ்வில் இணைய போகிறார் என்றும், அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.