ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தான்  அணி வெளியேறிய நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை எனவும் அவர்கள் ஒரு அணியே கிடையாது எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் அணிக்காக உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்.

நீங்கள் இந்தியாவுக்கு வந்து விடுங்கள். மிகவும் அரிதான வைரத்தை போன்றவர் கேரி கிறிஸ்டன். அவர் ஒரு தலைசிறந்த பயிற்சியாளர், ஆலோசகர் மற்றும் நேர்மையானவர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்த அனைவரிடமும் அன்பாக பழகினார். அந்த வருடம் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அவர் முக்கிய காரணம் என்று பதிவிட்டுள்ளார். இதே போன்று  அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், நீங்கள் உண்மையை உடைத்து பேசி விட்டீர்கள். மேலும் பாகிஸ்தான் அணி போன்ற ஒரு அணி உங்களைப் போன்ற பயிற்சியாளரைக் கொண்டிருக்க தகுதியற்றவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.