ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் மே 1-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று டெல்லியில் உள்ள தூதரகத்திற்கு வெளிய அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவால் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் ஒரு நபர் பாகிஸ்தான் தூதரகத்திற்கு கேக் கொண்டு சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது  பத்திரிக்கையாளர்கள் அந்த நபரிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்கின்றனர்.

இருப்பினும் அவர் பதில் கூறாமல் அங்கிருந்து வேகமாக செல்கிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாக்குதலை பாகிஸ்தான் கொண்டாடுகிறதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.