தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பாஜக மற்றும் திமுகவை மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தார். அதாவது எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை மாதிரி சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாக சாடினார். அதோடு மீண்டும் பாசிசம் மற்றும் பாயாசம் என்றும் பாஜக திமுக அரசுகளை விமர்சித்தார். இந்த நிலையில் விஜய்க்கு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, வசனம் பேசுவதில் வல்லவராக இருக்கும் விஜய் மத்திய பாஜக அரசை பற்றி பேசும்போது மட்டும் பதுங்குவது ஏன்.பாசிசம் மற்றும் பாயாசம் குறித்து தொடர்ந்து நக்கல் அடிப்பதை பார்த்தால் அவருக்கு இரண்டு விஷயங்கள் குறித்தும் எதுவும் தெரியாது என்பது போல் தான் தெரிகிறது. அவர் ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோரின் வரலாறுகளை முதலில் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது அதோடு படுகொலைக்கும் தயங்காது. மேலும் பாயாசம் சுவையானது மற்றும் அது உடல் நலத்திற்கும் நல்லது என்று கூறினார்.