பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா டன் ஒன்றுக்கு 1200 டாலர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அமல்படுத்தியதாக அரசு அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு உள்நாட்டு விலைகளை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

ஜுலையில் இந்தியா பாசுமதி, இதர வெள்ளை அரிசி ஏற்றுமதியை தடை செய்தும், வெள்ளிக்கிழமை முதல் அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரை வரி விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான், ஈராக், ஏமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் இந்தியா பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது.