அகமதாபாத்தில் நடைபெற்ற 16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தொண்டர் ஜடேஜா தான் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியை வெற்றி பெறச் செய்தது குஜராத்தை சேர்ந்த பாஜக கார்யகர்த்தா ஜடேஜா தான். தமிழக வீரர்களே இல்லாத சென்னை அணியை கொண்டாடுவது போல், அதிக தமிழ் வீரர்களை கொண்ட குஜராத் அணியையும் நாம் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.