
பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கும் நிலையில் நாம் ஒன்றிணைந்து தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது.
மணிப்பூர் கலவரம், CAG அறிக்கையில்கூறிய முறைகேடுகள் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.