தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆர் கே சுரேஷ். இவர் படங்களில் வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் நிர்வாகியும் ஆவார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே சுரேஷ் தற்போது ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக பாஜகவில் இணைந்ததாக கூறிய ஆர்.கே சுரேஷ் தற்போது அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் ஒன்றாக கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அதோடு தான் அரசியலில் இருப்பதால் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், சினிமாவிலும் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதால் அரசியலமைப்பை விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதனால் நடிகர் ஆர்கே சுரேஷ் பாஜகவிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.