
தென்காசி மாவட்டத்தில் பாஜக கட்சியின் புதிய மாவட்ட தலைவராக ஆனந்தன் அய்யாசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட தலைவர் அறிமுக விழா, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, நாட்டில் பாஜக நல்லாட்சி நடைபெற்று வரும் நிலையில் அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதைத்தான் திமுக அரசு செய்து வருவதாக கூறுகிறது. திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர்கள் அரசியல் மட்டும் தான் பேசுகிறார்கள். இந்த திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி.
அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026 தேர்தல் நமக்கு ஒரு அக்னி பரிட்சை என்பதால் 234 தொகுதிகளிலும் வெல்வதற்கு பாடுபட வேண்டும். மத்தியில் இருந்து என்ன சொன்னாலும் அதனை எதிர்ப்பது தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. இந்த இயக்கத்தில் நாம் பதவிக்காக இல்லை மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உழைப்பதற்காக தான் இருக்கிறோம். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார்.