
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்ற செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவரிடம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்காக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது மற்ற கட்சிகளுக்கு மட்டும் தான். அது பாஜகவுக்கு பொருந்தாது. முன்பு சொன்னது போன்றவே பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மேலும் எப்போதும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்றார்.
மேலும் அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்கள் சந்திப்பில் பாஜகவுடன் கூட்டணி என்று கேட்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி தேர்தல் சூழ்நிலைக்கு தக்க அப்போது முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இதன் காரணமாக மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க வேண்டிய எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக பாஜகவுடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டணி அமைக்காது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.