மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, பாஜக ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கின்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும். பாஜக ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பட்ஜெட் 2024 மீதான விமர்சனத்தையும் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதானி, அம்பானி என்ற பெயரை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் ஏ1, ஏ2 என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.