நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையாற்றுவதற்காக என்னை தேர்வு செய்துள்ளதற்கு நன்றி. சாமானிய ஏழை எளிய மக்களை முன்னேற்றிக் கொண்டு வந்துள்ளது நம் பாஜக அரசுதான். ஏழை மக்களுடைய நிலையை உணர்ந்து வீடு இல்லாத 4 கோடி பேருக்கு அரசு வீடு கட்டி தந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் வறுமையை ஒழித்துள்ளோம்.

சிலர் ஏழைகளின் வீட்டில் புகைப்படம் எடுப்பதை பொழுது போக்காக வைத்து அரசியலில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்ப்பது தான் அரசுடைய பணி. மக்களின் பணம் மக்களுக்கு என்பதே எங்கள் மாடல். தூய்மை இந்தியா திட்டத்தை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் தூய்மை இந்தியா திட்டத்தில் கிடைத்த பழையவற்றை விற்றதில் அரசுக்கு 2300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக மீட்டு உள்ளது. 25 கோடி மக்கள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.