அரியானா மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான ஆட்சி இருக்கிறது. இந்நிலையில் அரியானா  மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் பாஜகவில் இருந்து விலகி தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகவே காண்பித்து வருகிறார்கள். அதன் பிறகு சீட் மறுக்கப்பட்டவர்கள் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏ சக்ஷி ரஞ்சனுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்காக என்னுடைய பெயர் பட்டியலில் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது தவறாகிவிட்டது என்று கூறினார். அதோடு தனக்கு சீட் வழங்காததை நினைத்து அவர் தேம்பி தேம்பி அழுதார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை பலரும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைய ஆர்வம் காட்டி வருவதால் மாநில பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது.