
தமிழக பாஜக கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதும் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வரை இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியை கடுமையாக உழைத்து ஆட்சியில் அமர வைப்போம். எங்கள் கூட்டணியை எப்படி முதல்வர் ஸ்டாலினால் தோல்வி கூட்டணி என்று சொல்ல முடியும். மக்கள் யாரை வெற்றி பெற வைப்பார்கள் என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எங்களுடன் கூட்டணி வைக்காத நிலையில் இதனை மறைமுக கூட்டணி என்று சொல்வது தவறு. கண்டிப்பாக போகப்போக நிறைய மாற்றங்கள் வரும். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை வரும் போது அது வெத்து கூட்டணியா இல்லை வெற்றிக் கூட்டணியா என்பது தெரியவரும். கூட்டணியில் சேரும்போது ஒரு கருத்தும் கூட்டணி இல்லாத போது ஒரு கருத்தும் இருக்கும்.
தற்போது திமுகவை விரட்ட வேண்டும் என்ற காலகட்டத்தில் இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம். என்னுடைய எண்ணம் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து 40 ஆக உயர்த்த வேண்டும் என்பதுதான். மேலும் இறைவனின் ஆட்டம் எதுவோ என்று கூறினார்.